‛வழக்கு போட்டது நாங்க இல்ல‛ - பம்முகிறது பீட்டா

தினமலர்  தினமலர்
‛வழக்கு போட்டது நாங்க இல்ல‛  பம்முகிறது பீட்டா

சென்னை : தமிழகம் முழுவதும், 'பீட்டா' அமைப்பை தடை செய்யக் கோரி, போராட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், 'ஜல்லிக்கட்டுக்கு எதிராக, முதலில் வழக்கு தொடர்ந்தது, நாங்கள் அல்ல' என, அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுத்துள்ள, 'பீட்டா' எனும், விலங்குகள் நல, அமெரிக்க அமைப்புக்கு எதிராக, தமிழக மக்களின் பார்வை திரும்பியுள்ளது. அதை தடை செய்யக் கோரி, ஆயிரக்கணக்கானோர் போராடி வருகின்றனர்.

நிலைமை விபரீதம் அடைவதை உணர்ந்த பீட்டா, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: நாங்கள் சட்டத்தை உருவாக்குவதில்லை. மிருக வதை சட்டம் உருவாவதற்கு, நாங்கள் தான் காரணம் என, யாராவது கூறினால், அது திசை திருப்பும் செயல். மதுரையைச் சேர்ந்த, நாகராஜன் என்பவர் தான், 2006ல், இந்த விளையாட்டுக்கு எதிராக, முதலில் வழக்கு தொடர்ந்தவர். பின், அகில இந்திய விலங்குகள் நல வாரியம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது; இவ்வழக்கில் நாங்கள், 2011ல் தான் இணைந்தோம். இவ்வாறு அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

மூலக்கதை