ஆயுத விற்பனையில் பிரான்சின் சாதனை!!

PARIS TAMIL  PARIS TAMIL
ஆயுத விற்பனையில் பிரான்சின் சாதனை!!

2006ஆம் ஆண்டு, பிரான்ஸ், ஆயுதங்கள் மற்றும் போர்க்கலங்களின் விற்பனையில் பெரும் சாதனையை ஈட்டியுள்ளதாக, இன்று வியாழக்கிழமை பிரான்சின் பாதுகாப்பமைச்சர் ஜோன்-ஈவ் லூத்ரியோன் தெரிவித்துள்ளார்.
 
 
 
இந்தியாவுடனான RAFALE போர்விமானங்களிற்கான பாரிய ஒப்பந்தமும், அவுஸ்திரேலியாவிற்கான நீர்மூழ்கிக் கப்பல்களிற்கான ஒப்பந்தமும் பெரும் வருவாயினைப் பிரான்சிற்கு வழங்கி உள்ளது.
 
 
 
இந்த ஒப்பந்தங்கள், மற்றும், ஆயுத விற்பனை ஒப்பந்தங்கள் ஆகியவை, பிரான்சிற்கு 2016 ஆம் ஆண்டில், 20 பில்லியன் (இருபதினாயிரம் மில்லியன்கள்) வருவாயினை வழங்கி உள்ளது.
 
2015 ஆம் ஆண்டில் மேற்கொண்ட ஒப்பந்தங்களும், விற்பனைகளும் 17 பில்லியன் யூரோக்களை (பதினேழாயிரம் மில்லியன்கள்) வழங்கியிருந்தமை குறிப்படத்தக்கது.
 

மூலக்கதை