'தமிழுக்காக, தமிழ் கருவும் போராடும்' - போராட்டத்தில் களமிறங்கிய கர்ப்பிணி பெண்கள்

தினமலர்  தினமலர்
தமிழுக்காக, தமிழ் கருவும் போராடும்  போராட்டத்தில் களமிறங்கிய கர்ப்பிணி பெண்கள்

சென்னை : கர்ப்பிணி பெண் ஒருவர், 'தமிழுக்காக, தமிழ் கருவும் போராடும்' என்ற பதாகையை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். அவரின் புகைப்படம், சமூக வலைதளத்தில் பரவி வைரலாகி வருகிறது.
ஜல்லிக்கட்டை ஆதரித்தும், 'பீட்டா' அமைப்புக்கு தடைவிதிக்க கோரியும், மாணவர்களும், இளைஞர்களும், தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், வெளிநாடுகளிலும் போராட்டங்கள் நடக்கின்றன.
இந்நிலையில், கர்ப்பிணி பெண் ஒருவர், 'தமிழுக்காக, தமிழ் கருவும் போராடும்' என்ற பதாகையை ஏந்தி, போராட்டத்தில் ஈடுபட்ட புகைப்படம், போராட்டக்காரர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பரப்பி வைரலாக்கி வருகின்றனர். இது போராட்டக்காரர்கள் உத்வேகம் அளிப்பதாக உள்ளது.

கைக்குழந்தையுடன் போராட்டத்தில்



இரண்டு மாத கைக் குழந்தையுடன், தம்பதி, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட சம்பவம் நெகிழ வைத்துள்ளது.
ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக, தமிழகத்தின் நாலாபுறமும் போராட்டங்கள் நடக்கின்றன. திருமணம் முடிந்தவுடன், காளையுடன், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட மணமக்கள், கர்ப்பிணி பெண் என, பல சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில், பிறந்து இரண்டு மாதமே ஆன கைக்குழந்தையுடன், அதன் பெற்றோர், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட சம்பவம், மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மூலக்கதை