பரிசில் மாவீரர்களிற்கான நினைவுத்தூபி - புதிய நடவடிக்கை!!

PARIS TAMIL  PARIS TAMIL
பரிசில் மாவீரர்களிற்கான நினைவுத்தூபி  புதிய நடவடிக்கை!!

பிரான்சிற்கு வெளியில் OPEX (Opération extérieure) இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு  வீரச்சாவைத் தழுவிக் கொண்ட, இராணுவ வீரர்களிற்கான நினைவிடம் ஒன்றை அமைக்கும் முயற்சியில், பிரோன்சுவா ஒல்லோந்த் இறங்கியுள்ளார். இதற்கான அடிக்கல் நாட்டும் வைபவமானது எதிர்வரும் மார்ச் 23ம் திகதி நடைபெற உள்ளது.
 
 
«நான் எதிர்வரும் 23ம் திகதி மார்ச் மாதம் இந்தத் திட்டத்தினை ஆரம்பிக்க எண்ணியுள்ளேன். வெளிநாட்டில் இராணுவ நடவடிக்iயில் ஈடுபட்டு வீழ்ந்தவர்களிற்கான நினைவிடம் ஒன்றைப் பரிசில் அமைக்க உள்ளேன். இராணுவவீரர்கள், விமானிகள், ஈரூடகப்படையினர், கடற்படையினர் என கடந்த ஐம்பது வருடங்களில், 600 வீரர்கள் உயிரிழந்துள்ளார்கள்» என Mont-de-Marsan  இல் இராணுவவீரர்களிற்குப் புதுவருட வாழ்த்துக்களை வழங்கியபோது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
 
இந்த மாவீரர்களிற்கான நினைவுத் தூபியானது, பரிசின் André Citroën பூங்காவில் அமைக்கப்பட உள்ளது.
 

மூலக்கதை