இன்று காலை இளைஞன் சாவு - காவற்துறை வீரர் கைது!!

PARIS TAMIL  PARIS TAMIL
இன்று காலை இளைஞன் சாவு  காவற்துறை வீரர் கைது!!

Louveciennes (Yvelines) இலிருக்கும் இரவுக் கேளிக்கை விடுதியான, Le Pacha அருகில் ஒரு 20 வயது இளைஞன் சிற்றுந்தினால் மோதிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 
 
 
Orgeval  இனைச் சேரந்த இந்த இளைஞன், தனது நண்பர்களுடன் இந்த இரவுக் கேளிக்கை விடுதியில் இருந்து அதிகாலை புறப்பட்டுள்ளார். வாகனத் தரிப்பிடத்திலிருந்து வெளியே வந்த இந்தச் சிற்றுந்தினைச் செலுத்திய 20 வயது இளைஞன், மது போதையில் தேசியச் சாலை N 186 இலுளள் ஒரு மரத்துடன் வானத்தை மோதியுள்ளான். இதனால் வாகனத்தை நிறுத்தி விட்டு இறங்கி, வாகனத்திற்கான சேதத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது,  அதியுச்ச வேகத்தில் அஙகுவந்த சிற்றுந்து ஒன்று, இந்த இளைஞனை வேகமாக மோதியெறிந்து விட்டுத் தப்பி ஓடியுள்ளது. இந்த இளைஞன் உடனடியாக அங்கேயே சாவடைந்துள்ளார்.
 
உடனடியாகத் தகவல் கிடைத்து, பாதுகாப்புச் சுற்றில் வந்து கொண்டிருந்த காவற்துறையினர், இளைஞனை மோதித்தள்ளிவிட்டுத் தப்பியோடி, வாகனத்தை ஒரு இடத்தில் நிறுத்தியிருந்த சாரதியைக் கைது செய்து Saint-Germain-en-Laye காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.
 
ஆனால் ஆச்சரியமாக, விபத்தினை ஏற்படுத்தித் தப்பியோடியவர், Yvelines  பகுதியில். கடமையாற்றும் ஒரு காவற்துறை வீராவார். விபத்து நடந்த சமயத்தில் இவர் கடமையில் இருந்திருக்கவில்லை. அத்தோடு பொறுப்பான அதிகாரத்தில் இருக்கும் இவர், ஒருவரை மோதிவிட்டு, அவரை உயிராபத்தில் விட்டுவிட்டுத் தப்பியோடியும் உள்ளார்.
 
சாவடைந்தவருடன் இருந்த மற்றைய நண்பர்களும், அதியுச்ச மதுபோதையில் இருப்பதால், அவர்களின் போதை தெளிவிக்கப்பட்டு, நாளையே சாட்சியங்கள் பெறப்படும் எனவும் அதன் பின்ரெ விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படடுள்ளது.
 

மூலக்கதை