Bobigny - சோதனை நடவடிக்கைகள் மேற்கொண்ட மூன்று காவல்துறையினர் மீது தாக்குதல்! - 10 பேர் கைது!!

PARIS TAMIL  PARIS TAMIL
Bobigny  சோதனை நடவடிக்கைகள் மேற்கொண்ட மூன்று காவல்துறையினர் மீது தாக்குதல்!  10 பேர் கைது!!

சோதனை நடவடிக்கைகள் மேற்கொண்ட மூன்று காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. படுகாயமடைந்த அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளனர். சம்பவம் தொடர்பில் 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 
 
சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை Bobigny மாவட்டத்தின் rue de la gare நகர மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. வழக்கமான கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த மூன்று காவல்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டுள்ளனர். நேற்று, இரவு 8.20 மணி அளவில் கன்னாபீஸ் (போதைப்பொருள்) வாடை வீசுவதாக காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, அக் கட்டிடத்துக்குள் பிரவேசித்த குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இளைஞர்களை சோதனை இட முயன்றுள்ளனர். ஆனால் எதிர்பாரா விதமாக அவ் இளைஞர்கள் காவல்துறை அதிகாரிகளை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் அவசரமாக குற்றவியல் காவல்துறையினர் (Anti-Crime Brigade) வரவழைக்கப்பட்டு, 10 இளைஞர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 16 வதில் இருந்து 21 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த அதிகாரி அப்பகுதி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். அதிகாரிகளில் கண்களில் தாக்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

மூலக்கதை