இன்று பிரான்சில் நிலநடுக்கம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
இன்று பிரான்சில் நிலநடுக்கம்!!

இன்று சனிக்கிழமை காலை பிரான்சின் Bretagne பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை 7h35 அளவில், ரிக்டர் அலகில் 3.7 அளவான நிலநடுக்கம் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
 
Loudéac இலிருந்து 14 கிலோமீற்றர்கள் தூரத்தில் இன்று காலை 7h35 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினை, நிலநடுக்கத்திற்கான தேசிய அவதானிப்பு வலையமைப்பான Rénass (Réseau national de surveillance sismique) பதிவு செய்துள்ளது. இந்ந நிலநடுக்கம் பொருட்சேதங்களை ஏற்படத்தியிருந்தாலும், யாரும் காயப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

மூலக்கதை