பனி மழை! - நாடுமுழுவதும் அதிகளவான வாகன விபத்துக்கள் பதிவு!!

PARIS TAMIL  PARIS TAMIL
பனி மழை!  நாடுமுழுவதும் அதிகளவான வாகன விபத்துக்கள் பதிவு!!

நாடுமுழுவதும் அதிகளவான பனிமழை பெய்வதால், அதிகளவான வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. இன்று சனிக்கிழமை காலை பல வாகனங்கள் விபத்துக்குள்ளாகி, அவசர அழைப்புக்கள் வந்தவண்ணம் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பரிஸ், மற்றும் இல்-து-பிரான்சுக்குள் வாகனங்களுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் அதே நேரம், நாடு முழுவதும் பல பகுதிகளில் பனி காரணமாக வாகனங்கள் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இன்று காலை 5.45 மணிக்குள் Normandy தேசிய நெடுஞ்சாலையில் 14 விபத்துக்கள் பதியப்பட்டுள்ளன. A28, A29  ஆகிய சாலைகளில் அதிகளவு விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. 30 பகுதிகளுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டிருக்கும் நிலையில், இன்று அதிகாலை A28 நெடுஞ்சாலையில் இரண்டு கனரக வாகனம், மற்றும்  15 சிறிய ரக வாகனங்கள் வழுக்கிச்சென்று விபத்துக்குள்ளானது. மீட்புக்குழுவினர் வேகமாக செயல்பட்டு, விபத்துக்குள்ளானவர்களை மீட்டு வருகின்றனர். உயிரிழப்புக்கள் குறித்து தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. 
 
மேலும் Normandy மாவட்டத்தின் A13, A16, A29 ஆகிய சாலைகள் அதிகளவு பனி உறைந்துள்ளதாகவும், இச்சலைகளை பயன்படுத்துவதை தவிர்க்கவும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இல்-து-பிரான்சுக்குள் வாகனங்களை 80KMph வேகத்துக்கும் குறைவாக செலுத்தும் படி கோரப்பட்டுள்ளது. 
 

மூலக்கதை