எனக்கு முழு பாதுகாப்பு வேண்டும்: முஷராப்

தினமலர்  தினமலர்
எனக்கு முழு பாதுகாப்பு வேண்டும்: முஷராப்

கராச்சி: நான் பாகிஸ்தான் திரும்பி வரவேண்டுமென்றால் முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசிடம் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷராப் வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப். 2007-ம் ஆண்டு பாகிஸ்தான் அதிபராக பதவி வகித்த முஷாரப் அந்நாட்டில் நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தியும், நீதிபதிகளை காவலில் வைத்தும் உத்தரவிட்டார். இதனால் அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், நீதிமன்ற விசாரணையை அவர் பாகிஸ்தானில் தங்கி எதிர்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.ஆனால் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி அரசிடம் அனுமதி பெற்று முஷாரப் வெளிநாடு சென்றுவிட்டார்.

உயிருக்கு அச்சுறுத்தல்



தற்போது வெளிநாட்டில் தங்கியிருக்கும் முஷாரப், தான் பாகிஸ்தான் திரும்பி வரவேண்டுமென்றால் முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசிடம் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷராப் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக, தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் மனு ஒன்றினை அவர் தாக்கல் செய்துள்ளார்.

மூலக்கதை