குஜராத் முத­லீட்­டா­ளர்கள் மாநாட்டில் ஜவுளி துறையில் ரூ.8,835 கோடி முத­லீடு

தினமலர்  தினமலர்
குஜராத் முத­லீட்­டா­ளர்கள் மாநாட்டில் ஜவுளி துறையில் ரூ.8,835 கோடி முத­லீடு

புது­டில்லி:குஜராத் முத­லீட்­டா­ளர்கள் மாநாட்டில், ஜவுளி துறையில், 8,835 கோடி ரூபாய் மதிப்­பி­லான ஒப்­பந்­தங்கள் கையெ­ழுத்­தா­கி­யுள்­ளன.குஜ­ராத்தில், சர்­வ­தேச முத­லீ­டு­களை அதி­க­ளவில் ஈர்க்க, ‘வைபரன்ட் குஜராத்’ என்ற பெயரில், தொழில் முத­லீட்­டா­ளர்கள் மாநாட்டை, அம்­மா­நில அரசு நடத்தி வரு­கி­றது. அதன்­படி, இந்த ஆண்­டுக்­கான மாநாடு, குஜ­ராத்தில் உள்ள காந்தி நகரில், துவங்­கி­யது. அதில், ஜவுளி துறையில் மட்டும், 8,835 கோடி ரூபாய் மதிப்­பி­லான ஒப்­பந்­தங்கள் கையெ­ழுத்­தா­கி­யுள்­ளன.
இது­கு­றித்து, மத்­திய ஜவுளி துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி கூறி­ய­தா­வது: உலகில், ஜவுளி துறையில், இந்­தி­யாவின் பங்கு அதிகம் உள்­ளது. குறிப்­பாக, அந்த துறையை ஊக்­கு­விக்க, குஜராத் அரசு, பல்­வேறு சலு­கை­களை வழங்கி வரு­கி­றது. இதனால், வைபரன்ட் குஜராத் மாநாட்டில் பங்­கேற்ற முத­லீட்­டா­ளர்கள், ஜவுளி பூங்கா, ஜவுளி இயந்­திர உற்­பத்தி என, ஜவுளி துறையில் மட்டும், 8,835 கோடி ரூபாய் மதிப்­புக்கு முத­லீடு செய்ய, அர­சுடன், புரிந்­து­ணர்வு ஒப்­பந்தம் செய்­துள்­ளனர்.இவ்­வாறு அவர் கூறினார்.

மூலக்கதை