மேலும் ரூ.30,000 கோடிரிலையன்ஸ் ஜியோ முத­லீடு

தினமலர்  தினமலர்
மேலும் ரூ.30,000 கோடிரிலையன்ஸ் ஜியோ முத­லீடு

மும்பை:முகேஷ் அம்­பா­னியின் ரிலையன்ஸ் ஜியோ நிறு­வனம், கடந்த ஆண்டு, செப்., 5 முதல் மொபைல்போன் சேவையை இல­வ­ச­மாக வழங்கி வரு­கி­றது. இச்­சேவை, மார்ச் இறுதி வரை வழங்­கப்­படும் என, அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.
இல­வச அறி­விப்பால், ஏரா­ள­மானோர் ஆர்­ஜியோ சேவையை பெறு­வ­தற்கு ஆர்வம் காட்டி வரு­கின்­றனர். இதை­ய­டுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் இறுதி நில­வ­ரப்­படி, ஆர்­ஜியோ வாடிக்­கை­யா­ளர்­களின் எண்­ணிக்கை, 7.24 கோடி­யாக அதி­க­ரித்­துள்­ளது.குறு­கிய காலத்தில் இத்­த­கைய பிர­மாண்ட வளர்ச்சி கார­ண­மாக, ஆர்­ஜியோ, அதன் தொலை­தொ­டர்பு கட்­ட­மைப்பு வச­தியை, மேலும் பலப்­ப­டுத்த உள்­ளது. இதற்­காக, கூடு­த­லாக, 30 ஆயிரம் கோடி ரூபாய் முத­லீடு செய்­யப்­பட உள்­ளது.இத்­தொ­கையை திரட்ட, 6 கோடி உரிமை பங்­கு­களை, ஆர்­ஜியோ நிறு­வனம் வெளி­யிட முடிவு செய்­துள்­ளது.இந்த நட­வ­டிக்கை மூலம், ஆர்­ஜியோ நிறு­வ­னத்தின் மொத்த முத­லீடு, 1.90 லட்சம் கோடி ரூபா­யாக உயரும்.

மூலக்கதை