காகித இறக்­கு­ம­தியால் பாதிப்பு:பாது­காப்பு வரி விதிக்க கோரிக்கை

தினமலர்  தினமலர்
காகித இறக்­கு­ம­தியால் பாதிப்பு:பாது­காப்பு வரி விதிக்க கோரிக்கை

புது­டில்லி;இந்­திய காகித தயா­ரிப்­பா­ளர்கள் சங்­கத்தின் புதிய தலைவர், சவ்ரப் பங்குர் கூறி­ய­தா­வது:'ஆசியன்' நாடு­களில் இருந்து மலிவு விலையில் காகி­தங்கள் இறக்­கு­ம­தி­யா­வதால், உள்­நாட்டு காகித தயா­ரிப்பு நிறு­வ­னங்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. அதனால், செய்தித் தாள் தவிர்த்து, இதர 'எச்.எஸ்' குறி­யீடு சார்ந்த அனைத்து காகிதம், காகித அட்டை ஆகி­ய­வற்றின் இறக்­கு­ம­திக்கு, 12 – 15 சத­வீதம் பாது­காப்பு வரி விதிக்க வேண்டும்.
ஆசியன் நாடு­க­ளுடன் இந்­தியா செய்து கொண்ட தாராள வர்த்­தக ஒப்­பந்தம் கார­ண­மாக, காகிதம் மற்றும் காகித அட்டை இறக்­கு­ம­திக்­கான அனைத்து கட்­ட­ணங்­களும் படிப்­ப­டி­யாக குறைக்­கப்­பட்­டுள்­ளன. அடிப்­படை வரி,10 சத­வீதம், 2014, ஜன­வரி முதல், பூஜ்­ய­மாக நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது. இதனால், உள்­நாட்டு காகித உற்­பத்­தி­யா­ளர்கள் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அவர்கள், 'இந்­தி­யாவில் தயா­ரிப்போம்' திட்­டத்­திலும் பங்­கெ­டுக்­காமல் உள்­ளனர். ஆகவே, மத்­திய அரசு, உட­ன­டி­யாக, இப்­பி­ரச்­னைக்கு தீர்வு காண வேண்டும். காகிதம் மற்றும் காகித அட்டை இறக்­கு­ம­திக்கு, பாது­காப்பு வரி விதித்து, உள்­நாட்டு காகித தயா­ரிப்பு நிறு­வ­னங்­களை காக்க வேண்டும்.இவ்­வாறு அவர் கூறினார்.

மூலக்கதை