வரும் மாதங்­க­ளிலும் ஏற்­று­மதி அதி­க­ரிக்கும்:இந்­திய நிறு­வ­னங்கள் நம்­பிக்கை

தினமலர்  தினமலர்
வரும் மாதங்­க­ளிலும் ஏற்­று­மதி அதி­க­ரிக்கும்:இந்­திய நிறு­வ­னங்கள் நம்­பிக்கை

புது­டில்லி:நாட்டின் ஏற்­று­மதி, வரு­கின்ற மாதங்­க­ளிலும் தொடர்ந்து வளர்ச்­சியை காணும் என ஏற்­று­ம­தி­யா­ளர்கள் நம்­பிக்கை தெரி­வித்­தி­ருக்­கி­றார்கள்.இந்­தி­யாவின் ஏற்­று­மதி, தொடர்ந்து நான்கு மாதங்­க­ளாக வளர்ச்­சியை கண்டு வரு­கி­றது. கடந்த டிசம்பர் மாதத்­திலும் வளர்ச்சி கண்­டுள்­ளது. இதை­ய­டுத்து வரும் மாதங்­க­ளிலும், ஏற்­று­மதி வளர்ச்­சி­ய­டையும் என்றும், அதன் பய­னாக நடப்பு நிதி­யாண்டில், 270 _280 பில்­லியன் அமெ­ரிக்க டாலர் அள­வுக்கு ஏற்­று­மதி அதி­க­ரிக்கும் எனவும் இத்­து­றை­யினர் கரு­து­கின்­றனர்.
இது குறித்து, இந்­திய ஏற்­று­மதி நிறு­வ­னங்­களின் கூட்­ட­மைப்பின் தலைவர், எஸ்.சி.ரால்கான் கூறி­யுள்­ள­தா­வது:அமெ­ரிக்கா, ஐரோப்­பிய கூட்­ட­மைப்பு, சீனா ஆகிய நாடுகள் இந்த கால­கட்­டத்தில் வீழ்ச்­சியை சந்­தித்­தி­ருக்கும் நிலையில், நாம் வளர்ச்சி அடைந்­தி­ருக்­கிறோம். இந்த வளர்ச்­சி­யா­னது எங்­க­ளுக்கு ஊக்­கத்தை தரு­வ­தாக இருக்­கி­றது.இத்­த­கைய தொடர்ச்­சி­யான வளர்ச்­சியை பார்க்­கும்­போது, நடப்பு நிதி­யாண்டில் ஏற்­று­ம­தி­யா­னது, 270 முதல் 280 பில்­லியன் டாலர் என்ற அளவை எட்டும் என கரு­து­கிறோம்.இவ்­வாறு அவர் தெரி­வித்­துள்ளார்.
நாட்டின் ஏற்­று­மதி, கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும், 5.72 சத­வீதம் வளர்ச்சி பெற்று, 23.9 பில்­லியன் டாலர் என்ற அளவை எட்­டி­யி­ருக்­கி­றது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை­யி­லான கால­கட்­டத்தில் ஏற்­று­மதி 0.75 சத­வீதம் அள­வுக்கு அதிக­ரித்து, 198.8 பில்­லியன் டாலர் அளவில் உள்­ளது.அதே­ச­மயம், இறக்­கு­ம­தியை பொறுத்­த­வரை, 7.42 சத­வீதம் குறைந்து, 275.3 பில்­லியன் டாலர் என்ற அளவில் உள்­ளது.

மூலக்கதை