பிஜியில் நிலநடுக்கம்பொதுமக்கள் பீதி

தினமலர்  தினமலர்
பிஜியில் நிலநடுக்கம்பொதுமக்கள் பீதி

சுவா, பிஜியில் நேற்று ஏற்பட்ட நில நடுக்கத்தால், மக்கள் பீதியடைந்தனர்.பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள, தீவு நாடான பிஜியில் நேற்று பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில், 6.1 ஆக பதிவான இந்த நில நடுக்கத்தால், வீடுகள் குலுங்கின. இதனால், மக்கள் அலறி அடித்து, வீடுகளை விட்டு வெளியேறினர். எனினும், உயிரிழப்பு, பொருள் சேதம் குறித்து, உடனடியாக தகவல்கள் வெளியாகவில்லை.கடந்த வாரம், ரிக்டர் அளவில், 7.2 ஆக பதிவான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், தற்போது, மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, பொதுமக்களை பீதியடையச் செய்துள்ளது.

மூலக்கதை