லஞ்ச புகாரில் சிக்கிய சாம்சங் நிறுவன அதிபர்

தினமலர்  தினமலர்
லஞ்ச புகாரில் சிக்கிய சாம்சங் நிறுவன அதிபர்


சியோல், கிழக்காசிய நாடுகளில் ஒன்றான, தென் கொரியாவின் பெண் அதிபராக இருந்தவர், பார்க் கைன் ஹை. தன் தோழி, சோய் சூன் சில்லுக்கு, அரசின் முக்கிய பொறுப்புகளை தந்ததுடன், ஆட்சியில் பெருமளவு ஊழல்கள் செய்ததாக புகார் எழுந்தது.
இதனால், அதிபர் பார்க் கைன் ஹை, பதவி விலகக்கோரி நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது; இதையடுத்து, அவர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். அவர் மீதான புகார் குறித்து, அந்நாட்டு அரசியல் சாசன கோர்ட் விசாரித்து வருகிறது.
இந்நிலையில், 2015ல், தென்கொரியாவின் சாம்சங் நிறுவனம், மற்றொரு வர்த்தக நிறுவனத்தை இணைத்துக் கொண்டது. இதற்கு, சாதகமாக செயல்பட அதிபர் பார்க் கைன் ஹைக்கு, நன்கொடை என்ற பெயரில் பெருந்தொகை கைமாறியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, சாம்சங் நிறுவன தலைவர் ஜாய்
ஒய் லீயிடம் அந்நாட்டு ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், சியோலில் தொடர்ந்து, 22 மணிநேரம் விசாரணை
நடத்தினர். அதிகாரிகள், அவரிடம் நடத்தப்பட்ட
விசாரணை விபரங்களை வெளியிடவில்லை.

மூலக்கதை