பாகிஸ்தான் அணிக்கு ஏற்பட்ட பரிதாபம்!

PARIS TAMIL  PARIS TAMIL
பாகிஸ்தான் அணிக்கு ஏற்பட்ட பரிதாபம்!

 அவுஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் தோல்யியடைந்தது.

 
அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலிய அணி 3-0 என கைப்பற்றியது.
 
அதன்பின் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் இன்று பிரிஸ்பேனில் நடந்தது.
 
முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 268 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
 
பாகிஸ்தான் அணி சார்பில் ஹசன் அலி 3 விக்கெட்டும், மொகமது ஆமிர் மற்றும் இமாத் வாசிம் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.
 
பின்னர் 269 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது.
 
எவ்வாறாயினும் பாகிஸ்தான் அணி 42.4 ஓவர்களில் 176 ஓட்டங்களை மாத்திரம் பெற்று சகல விக்கட்களையும் இழந்தது.
 
இந்நிலையில் அவுஸ்திரேலிய அணி வெற்றியை தனதாக்கியது.
 

மூலக்கதை