கன்னியாகுமரியில் பாரதமாதா கோயில் திறப்புவிழா: ஏழைகள் இல்லா இந்தியாவை உருவாக்க மோடி உறுதி

தமிழ் முரசு  தமிழ் முரசு
கன்னியாகுமரியில் பாரதமாதா கோயில் திறப்புவிழா: ஏழைகள் இல்லா இந்தியாவை உருவாக்க மோடி உறுதி

கன்னியாகுமரி: ஏழைகளே இல்லாத இந்தியாவை உருவாக்கவே ஜன்தன் யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என பிரதமர் மோடி பேசினார். கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா வளாகத்தில் ரூ.

15 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பாரத மாதா கோயில், ராமாயண கண்காட்சி கூடம் ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை டெல்லியில் இருந்து  வீடியோ கான்பிரன்சிங் மூலம் திறந்து வைத்தார். விழாவில்  பிரதமர் மோடி , அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து என தமிழில் வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது; கன்னியாகுமரி புண்ணிய பூமியாகும். அங்கு பாரதமாதா கோயில் கட்டுவது மிகவும் பொருத்தமானது.

இளைஞர்கள் தங்களது இளமை பருவத்திலேயே ஆன்மிக பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். கன்னியாகுமரியில் ஏக்நாத் ரானடே கண்ட கனவுகளில் ஒன்றான பாரத மாதா கோயில் தற்போது நனவாகியுள்ளது.

ராமனை நினைக்கும் போதெல்லாம் நமக்கு நினைவுக்கு வருவது அனுமன். எனவே தான் இந்த ஆலயம் முன்பு ஆஞ்சனேயருக்கு 27 அடி உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம் அருகே திருவள்ளுவர் சிலை அமைந்தது, இயல்பாக அமைந்த அதிசயம்.

தற்போது பாரத மாதா கோயிலில் ராமாயண முக்கிய நிகழ்வுகள் ஓவியங்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இது அனைத்து தரப்பு மக்களுக்கும் ராமாயணத்தை எளிதாக எடுத்துச்செல்லும்.

ராமாயண காலத்தில் அயோத்தியில் ஏழைகளே இல்லை. தற்போதும் அது போல ஏழைகளே இல்லாத இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் ஜன்தன் யோஜனா திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

விவேகானந்தர் பிறந்த தினத்தில் கேந்திராவில் இந்த விழா நடப்பது மிகவும் பொருத்தமானது ஆகும். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நான் விரைவில் வருகை தருவேன்.

இவ்வாறு அவர் பேசினார். விழா கேந்திர வளாகத்தில் கடற்கரை பகுதியில் நடந்தது.

வீடியோ கான்பரன்சிங் முறையில் பிரதமர் பேசியது பெரிய திரைகள் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

.

மூலக்கதை