இந்தியா-இங்கிலாந்து தொடரை ரத்து செய்ய முயன்றாரா ஷிர்கே?

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்தியாஇங்கிலாந்து தொடரை ரத்து செய்ய முயன்றாரா ஷிர்கே?

மும்பை: இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையேயான மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட நிர்ணயிக்கப்பட்ட ஓவர்கள் தொடர் வரும் 15ம் தேதி தொடங்குகிறது.

இந்த சூழ்நிலையில் லோதா கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்தாததால், பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை அப்பொறுப்புகளில் இருந்து நீக்கி, கடந்த சில நாட்களுக்கு முன் உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இதனால் இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான ெதாடருக்கு சிக்கல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

அதற்கு ஏற்றாற்போல், பிசிசிஐ செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அஜய் ஷிர்கே, இந்திய சுற்றுப்பயணத்தை ரத்து செய்து விடும்படி, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் (இசிபி) கிரிக்கெட் வாரிய தலைவர் ஜிலெஸ் கிளர்க்கிடம் வலியுறுத்தியுள்ளார்.

பிசிசிஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோஹரிக்கு, ஜிலெஸ் கிளர்க் கடந்த 6ம் தேதி அனுப்பிய இ-மெயில் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

உச்சநீதிமன்றம் விதித்துள்ள கட்டுப்பாடுகளால், மாநில கிரிக்கெட் சங்கங்களிடம் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் இங்கிலாந்து அணிக்கு பாதுகாப்பில் பிரச்னை ஏற்படலாம் எனவும் அஜய் ஷிர்கே கூறியதாக, ஜிலெஸ் கிளர்க் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போதுதான் தெரியவந்துள்ளது.

இதனால் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகான நிலையை தெளிவாக விளக்கும்படியும் அந்த இ-மெயிலில், ஜிலெஸ் கிளர்க் வலியுறுத்தியுள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள ராகுல் ஜோஹரி, ‘திட்டமிட்டபடி இந்த தொடர் நடைபெறும்.

போட்டிகளை நடத்தும் அனைத்து மையங்களுடனும் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம். போட்டிகளை நடத்த முடியும் என அவர்களும் நம்பிக்கையுடன் கூறியுள்ளனர்’ என தெரிவித்துள்ளார்.



ஆனால் வீரர்களுக்கான படி, ஓட்டல் கட்டணம், போக்குவரத்து செலவு உள்ளிட்ட அம்சங்கள் தவிர இங்கிலாந்து அணிக்கான பாதுகாப்பில் பிரச்னை ஏற்படலாம் என அஜய் ஷிர்கே தன்னிடம் விவாதித்ததாக, மீண்டும் கடந்த 7ம் தேதி ஜிலெஸ் கிளர்க் இ-மெயில் அனுப்பியுள்ளார். ஆனால் இந்த விவகாரம் குறித்து ராகுல் ஜோஹரியும், ஜிலெஸ் கிளர்க்கும் பதில் அளிக்க மறுத்து விட்டனர்.

இவர்களின் இந்த உரையாடல் குறித்து முழுமையாக அறிந்து வைத்துள்ள ேலாதா கமிட்டி, இந்த இ-மெயில்களை ஜனவரி 19ம் தேதிக்கு முன்னதாக உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. லோதா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பான வழக்கின் விசாரணை ஜனவரி 19ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இது குறித்து விளக்கும்படி அஜய் ஷிர்கேவிடம் கேட்டபோது, இந்த தகவல் உண்மையல்ல என்றார்.



.

மூலக்கதை