நெருக்கடியில் பாகிஸ்தான் அணி

தமிழ் முரசு  தமிழ் முரசு
நெருக்கடியில் பாகிஸ்தான் அணி

பிரிஸ்பேன் : பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டெஸ்ட் தொடரை 3-0 என இழந்த பாகிஸ்தான், அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

இதன் முதல் போட்டி நாளை பிரிஸ்பேனில் இந்திய நேரப்படி காலை 8. 50 மணிக்கு தொடங்குகிறது. பாகிஸ்தான் ஒன்டே தரவரிசையில் 89 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது.

2019ம் ஆண்டு உலக கோப்பைக்கு வரும் செப்டம்பர் 30ம் தேதி நிலவரப்படி தரவரிசையில் முதல் 7 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடி தகுதி பெறும். மேலும் போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில்  இங்கிலாந்து நேரடி தகுதி பெற்றுவிட்டது.

வங்கதேசம் 91 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. தரவரிசையில் கடைசி 4 இடத்தில் உள்ள அணிகள், புதிதாக இணையும் 6 கத்துக்குட்டி அணிகளுடன் தகுதி சுற்றில் மோதவேண்டும்.

தற்போதைய நிலவரப்படி முன்னாள் சாம்பியன்கள்  பாகிஸ்தான்,  வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் தகுதிச்சுற்றில் ஆடவேண்டிய நிலை உள்ளது. இதனை தவிர்க்க ஆஸி.

தொடரை கைப்பற்றி  தரவரிசையில் முன்னேற்றம் காண வேண்டிய நெருக்கடியுடன் பாகிஸ்தான் களம் இறங்குகிறது.

மிஸ்பா உல் ஹக்குக்கு   மிக்கி ஆர்தர் ஆதரவு
டெஸ்ட் தொடரில்  பாகிஸ்தான் அணி 3-0 என படுதோல்வியை சந்தித்தது. 42 வயதாகும் பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டன் மிஸ்பா உல் ஹக் 6 இன்னிங்சுகளில் வெறும் 76 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இதனால் அவர் ஓய்வு பெற்று விடுவார் என பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதனிடையே பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், மிஸ்பா உல் ஹக் தொடர்ந்து விளையாட வேண்டும் என ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டி: ஓய்வு பெறுவது என்பது மிஸ்பாவின் தனிப்பட்ட முடிவு. தன்னைத்தானே சுய மதிப்பீடு செய்து கொள்ள அவருக்கு நேரம் தேவை.

மிஸ்பாவின் கேரியர் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஓய்வு பெறலாம் என அவர் முடிவு செய்யும்போது, பாகிஸ்தானின் சிறந்த கேப்டன்களில் ஒருவராகவும், சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகவும்தான் அவர் செல்வார்.

இவ்வாறு அவர் கூறினார்.



.

மூலக்கதை