டோனி, யுவராஜ் 4, 5வது இடத்தில் ஆட வேண்டும் - கபில்தேவ் கருத்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
டோனி, யுவராஜ் 4, 5வது இடத்தில் ஆட வேண்டும்  கபில்தேவ் கருத்து

மும்பை:  இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் அளித்துள்ள பேட்டி:  நான் விராட் கோஹ்லியின் தீவிர ரசிகன். அவர் டெஸ்ட் போட்டிகளில்  கேப்டனாக சிறப்பாக  செயல்பட்டார்.

இங்கிலாந்து தொடரின் போது கேப்டனாக அவரின் செயல்பாட்டில் முதிர்ச்சியை காண முடிந்தது. டெஸ்ட்டில் சாதித்த அவருக்கு தற்போது உண்மையான சவால் ஏற்பட்டுள்ளது.

வரையறுக்கப்பட்ட ஓவர் போட்டிகளிலும் அவர் சாதிக்க நேரம் கொடுக்க வேண்டும். 2019 உலக கோப்பை வரை டோனி, யுவராஜ் சிங் விளையாட நினைத்தாலும் அது அவர்களுக்கு எளிதாக இருக்கப்போவதில்லை. 34,35 வயதில் திறமை இருந்தாலும் உடற்தகுதி அவசியம்.

இங்கிலாந்து தொடரில் டோனி, யுவராஜ் சிங் 4 மற்றும் 5வது இடத்தில் களம் இறங்க வேண்டும். இருவரும் சிறப்பாக ஆடும்பட்சத்தில் சாம்பியன் டிராபியை கைப்பற்ற நல்ல வாய்ப்பு ஏற்படும்.


.

மூலக்கதை