இந்தியா - வியட்நாம் ஏவுகணை ஒப்பந்தம்: சீனா டென்ஷன்

தினமலர்  தினமலர்
இந்தியா  வியட்நாம் ஏவுகணை ஒப்பந்தம்: சீனா டென்ஷன்

ஹனோய்: வியட்நாம் இந்தியாவிடமிருந்து ஏவுகணைகள் வாங்க திட்டமிட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தாக உள்ள ஏவுகணை ஒப்பந்தம் சீனாவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏவுகணை வாங்க திட்டம்


பிரதமர் மோடி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வியட்நாமின் ஹனோய் நகருக்கு சென்ற போது வியட்நாமிற்கு 500 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆயுதங்கள் வழங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இது தவிர வியட்நாம் கப்பல் படைகளுக்கு இந்தியா நீர் மூழ்கி கப்பல் பயிற்சியும் அளித்து வருகிறது. இந்நிலையில் வியட்நாம் இந்தியாவிலிருந்து ஏவுகணைகள் வாங்கும் திட்டத்திலும் உள்ளது. இதனால் சீனா கலக்கம் அடைந்துள்ளது.

சீனா வலியுறுத்தல்


இந்தியா வியட்நாம் இடையேயான நட்புறவில் சீனா தலையிட விரும்பவில்லை என்றும் அதே நேரம் அமைதிக்கு பாதகம் ஏற்படும் வகையில் இரு நாடுகளுக்கு இடையோன ஏவுகணை ஒப்பந்தம் இருக்கும் என சீனா கருதுகிறது. இந்நிலையில் வியட்நாம் அதிபர் குயேன் பு டிரோங் ஜனவரி 12ல் அரசு முறைப்பயணமாக சீன தலைநகர் பெய்ஜிங் செல்ல திட்டமிட்டுள்ளார். அவர் வருகையின் போது இந்தியாவிடமிருந்து ஏவுகணை வாங்கும் திட்டத்தை கைவிட வேண்டி சீனா வியட்நாமிடம் வலியுறுத்த முயற்சிப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை