லாலுவுக்கு 'பென்ஷன்': பீஹாரில் வினோதம்

தினமலர்  தினமலர்
லாலுவுக்கு பென்ஷன்: பீஹாரில் வினோதம்

பாட்னா: மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற லாலு பிரசாத் யாதவிற்கு ‛பென்ஷன்' வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது சலசலப்பை உண்டாக்கியுள்ளது.

போராட்டம்:


பீஹாரில், ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. மறைந்த தலைவர், ஜெயபிரகாஷ் நாராயண் தலைமையில், 1974ல், பீஹார் வளர்ச்சியை முன்னிறுத்தி, சம்பூர்ண கிராந்தி போராட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானோர் சிறை சென்றனர்.

பென்ஷன் திட்டம்:


மாநில வளர்ச்சிக்காக சிறை சென்றோரை கவுரவப்படுத்தும் வகையில், அவர்களுக்கு பென்ஷன் வழங்கும் திட்டத்தை, முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு அறிமுகம் செய்தது. இந்த போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற, லாலு பிரசாத் யாதவ், மாநில அரசு திட்டத்தின் கீழ், மாதம், 10 ஆயிரம் ரூபாய் பென்ஷன் வேண்டி விண்ணப்பித்தார். இதற்கு, மாநில அரசு ஒப்புதலும் வழங்கியுள்ளது. இதே போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற முதல்வர் நிதிஷ், தனக்கு பென்ஷன் வேண்டாம் என, தெரிவித்துள்ளார்.

சலசலப்பு:


பீஹார் முதல்வராக இருந்தபோது, மாட்டுத் தீவன ஊழல் வழக்கில், ஐந்து ஆண்டு சிறை தண்டனை பெற்ற, லாலுவுக்கு, மாநில அரசின் சார்பில் பென்ஷன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது, பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை