நடிகர் மனோபாலா மீது புகார் கமி‌ஷனர் அலுவலகத்தில் மனு

தினத்தந்தி  தினத்தந்தி
நடிகர் மனோபாலா மீது புகார் கமி‌ஷனர் அலுவலகத்தில் மனு

சென்னை,

சென்னை நங்கநல்லூரை சேர்ந்தவர் சினி சரவணன். அ.தி.மு.க.வைச் சேர்ந்த இவர் சினிமாவிலும் நடித்துள்ளார். சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் இவர் நேற்று புகார் மனு ஒன்றைக் கொடுத்தார்.

அதில் கூறியிருப்பதாவது:–

அ.தி.மு.க.வின் பேச்சாளரும், நகைச்சுவை நடிகருமான மனோபாலா வாட்ஸ்–அப்பில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா பற்றியும், முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பற்றியும் தவறான அவதூறு தகவல்களை வெளியிட்டுள்ளார். அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல சென்னை பெரம்பூரைச் சேர்ந்த சத்தீஸ்வரி (வயது25) என்ற இளம்பெண்ணும் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த புகார் மனுவில், மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவின் ஆதரவாளராக நான் இருக்கிறேன். இதனால் என்னைப்பற்றி வாட்ஸ்–அப்பில் தவறான தகவல்களை பரப்புகிறார்கள். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகார் மனுக்கள் சைபர் கிரைம் போலீஸ் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மூலக்கதை