பீகாரில் லாலுவுக்கு பென்ஷன்! 

விகடன்  விகடன்
பீகாரில் லாலுவுக்கு பென்ஷன்! 

மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனைப் பெற்ற பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவிற்கு பென்ஷன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

பீகாரில், ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் – ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 

மாநில வளர்ச்சிக்காக சிறை சென்றோரை கௌவுரவப்படுத்தும் வகையில், அவர்களுக்குப் பென்ஷன் வழங்கும் திட்டத்தை, முதல்வர் நிதிஷ்குமார் அறிமுகம் செய்தார். இந்தப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற, லாலு பிரசாத் யாதவ், மாநில அரசு திட்டத்தின் கீழ், மாதம், ரூ.10 ஆயிரம் பென்ஷன் வேண்டி விண்ணப்பித்தார். இதற்கு மாநிலஅரசு ஒப்புதல் வழங்கிய நிலையில், இதே போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற முதல்வர் நிதிஷ் குமார், தனக்கு பென்ஷன் வேண்டாம் என்று கூறியுள்ளார். இதனிடையே, பீகார் முதல்வராக இருந்தபோது, மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் ஐந்து ஆண்டு சிறை தண்டனைப் பெற்ற லாலுவுக்கு, பென்ஷன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 
 

மூலக்கதை