பாகிஸ்தான் அரசு நிறுவனங்கள் மீது நடவடிக்கை ஐ.நா.வில் ஆப்கானிஸ்தான் வலியுறுத்தல்

தினத்தந்தி  தினத்தந்தி
பாகிஸ்தான் அரசு நிறுவனங்கள் மீது நடவடிக்கை ஐ.நா.வில் ஆப்கானிஸ்தான் வலியுறுத்தல்

நியூயார்க்,

ஆப்கானிஸ்தானில் அடிக்கடி தாக்குதல் நடத்தி வரும் பயங்கரவாதிகள், பாகிஸ்தானை தங்கள் தங்குதளமாக பயன்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கு பாகிஸ்தானின் ராணுவம் உள்பட பல்வேறு அரசு அமைப்புகள் ஆதரவு அளித்து வருகின்றன. இந்த செயலுக்கு ஆப்கானிஸ்தான் கண்டனம் தெரிவித்து உள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆப்கானிஸ்தான் நிரந்தர பிரதிநிதி முகமது சைகல் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தான் மற்றும் நமது பகுதியில் நடைபெறும் தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்பு நிலையற்ற தன்மைக்கும், இந்த பிராந்தியத்தில் உள்ள பயங்கரவாத சரணாலயங்களுக்கும் இடையே பிரிக்க முடியாத தொடர்பு உள்ளது. பிரிவினைவாத குழுக்கள் தங்கள் கொடூர செயல்களை தொடர்வதற்கு இந்த சரணாலயங்களில் இருந்து அரசியல், நிதி, பொருள் ரீதியான உதவிகளை பெற்று வருகின்றனர்’ என்று தெரிவித்தார். இந்த விவகாரத்தில் பாகிஸ்தானை சேர்ந்த அமைப்புகளை மறைமுகமாக குற்றம் சாட்டிய சைகல், சில அரசு நிறுவனங்கள் தங்கள் வெளிநாட்டு திட்டத்தை முன்னெடுப்பதற்காக இந்த தாக்குதல்களை ஆதரிப்பதாக கூறினார். இந்த நிறுவனங்கள் மீது ஐ.நா.வும், பாதுகாப்பு கவுன்சிலும் அதிக கவனம் செலுத்துவதுடன், அவற்றுக்கு எதிராக நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

மூலக்கதை