சிங்க நடை போட்ட தங்க மகள்

தினமலர்  தினமலர்
சிங்க நடை போட்ட தங்க மகள்

அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த, 'கோல்டன் குளோப்' விருது வழங்கும் விழாவில், பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த உடை, சமூக வலைத் தளங்களில் 'வைரல்'ஆகியுள்ளது. வழக்கமாக, ஆஸ்கர், கோல்டன் குளோப் போன்ற விருது நிகழ்ச்சிகளில், நடிகையர் அணிந்து வரும் உடைகள், நன்றாக இருக்கிறதா, இல்லையா என விமர்சித்து, வெளிநாட்டு ஊடகங்கள் பட்டியலிடுவது வழக்கம். இதற்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சியில், பிரியங்கா அணிந்து வந்த உடை, மிக மோசமான உடைகளுக்கான பட்டியலில் இடம் பெற்றிருந்தது. ஆனால், கோல்டன் குளோப் நிகழ்ச்சிக்கு அவர் அணிந்திருந்த, கோல்டன் கலரிலான நீண்ட கவுனுக்கு, ஆதரவும், எதிர்ப்பும் சரிசமமாக கிடைத்துள்ளது. இதனால், இனிமேல் நடக்கும் விருது நிகழ்ச்சிகளுக்கு அணியப் போகும் உடையை தேர்வு செய்வதில், மிகவும் கவனம் செலுத்த திட்டமிட்டு உள்ளாராம், பிரியங்கா.

மூலக்கதை