‘மாணவர்கள் அஜித்-விஜய்-தனுஷுக்காக போராடவில்லை…’ – சிம்பு

FILMI STREET  FILMI STREET
‘மாணவர்கள் அஜித்விஜய்தனுஷுக்காக போராடவில்லை…’ – சிம்பு

பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு நடத்திட வேண்டும் என தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள் அவர்கள் சார்ந்த மாவட்டங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதில் போலீஸ் அவர்களின் மீது லத்தி சார்ஜ் நடத்தினர்.

எனவே மாணவர்களுக்கு ஆதரவாக களம் இறங்கிய பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது ஆவேசமாக பேட்டியளித்தார்.

நான் தமிழன். தமிழ் உணர்வுள்ளவன். என் மக்களுக்காக என் மண்னுக்காக போராடுவேன்.

ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தினால் லத்திசார்ஜ் செய்வார்கள்.

எல்லாரும் ஒவ்வொரு இடத்திலும் போராடுகிறார்கள்.

ஆனால் நான் என் வீட்டின் முன்பு ஜனவரி 12ஆம் தேதி மாலை 5 மணிக்கு கறுப்பு சட்டை அணிந்துக் கொண்டு, பத்து நிமிடம் மௌனமாக நிற்கப் போகிறேன்.

போலீஸ் என்னை ஒன்றும் செய்ய முடியாது. முடிஞ்சா என்னைய அடிடா பார்க்கலாம்.

மாணவர்கள் அஜித், விஜய் தனுஷ்க்காக போராடவில்லை. நம் கலாச்சாரத்திற்காக போராடுகிறார்கள்.

உங்களுக்கும் தமிழ் உணர்வு இருந்தால் நீங்கள் அப்படி செய்யுங்கள்.

எல்லாரும் தங்கள் எதிர்ப்பை 10 நிமிடம் செலவழித்து இப்படி தெரிவிப்போம்.

எதற்காகவோ காத்திருக்கும் இதை செய்ய மாட்டீர்களா?

நீங்கள் எங்கிருந்தாலும் இப்படி செய்யுங்கள்.

எல்லாருக்கும் தமிழ் உணர்வு உள்ளதா? என்று பார்ப்போம்.

ஒருவேளை போதுமான ஆதரவு இல்லையென்றால் இனி தமிழர்களின் எந்த பிரச்சினைக்கும் நான் வரமாட்டேன்.

அமெரிக்க விசா உள்ளது. அங்கு சென்றுவிடுவேன்” என தெரிவித்தார்.

மூலக்கதை