கொம்பு வச்ச சிங்கம்!

தினமலர்  தினமலர்
கொம்பு வச்ச சிங்கம்!

ஜி.வி.பிரகாஷ் என்றாலே, டாஸ்மாக், கேலி, கிண்டல் போன்ற படங்களில் நடிக்கும் நடிகர் என்ற முத்திரை பதிந்துள்ளது. இதை மாற்றுவதற்காக, ரொம்பவே மெனக்கெடுகிறார் அவர். தற்போது அவர் நடித்து வரும், புருஸ்லி படத்திலும், கேலி கிண்டல் இருந்தாலும், செமத்தியான ஆக் ஷன் விருந்தாகவும் இருக்குமாம். அடுத்தகட்டமாக, பொது விஷயங்களிலும் தன்னை ஈடுபடுத்துவதில் ஆர்வம் காட்டுகிறார், ஜி.வி. இதன் முதற்கட்டமாக, ஜல்லிக்கட்டு மற்றும் விவசாய பிரச்னைகளுக்கு ஆதரவு தெரிவித்து, கொம்பு வச்ச சிங்கம்டா என்ற, இசை ஆல்பம் தயாரித்துள்ளாராம். விரைவிலேயே, அந்த ஆல்பத்தை, ரசிகர்களின் காதுகளில் தெறிக்க விட முடிவு செய்துள்ளாராம்.

மூலக்கதை