தி.மு.க. செயல் தலைவர்: மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து

தினத்தந்தி  தினத்தந்தி
தி.மு.க. செயல் தலைவர்: மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து

சென்னை,

தி.மு.க. செயல் தலைவராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நேற்று அண்ணா அறிவாலயம் வந்த மு.க.ஸ்டாலினை தொண்டர்கள் உற்சாகம் பொங்க வரவேற்றனர்.

நடிகர் பிரபு, தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம், இந்திய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் பி.ஜெயசீலன், நடிகர் மோகன்பாபு, ஓட்டல் சங்க நிர்வாகி வாசுதேவன், ராமச்சந்திரா மருத்துவமனை வெங்கடாசலம், துபாய் தமிழ்சங்க நிறுவனர் ரமேஷ் விஸ்வநாதன் உள்பட பலர் நேற்று மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

மூலக்கதை