புதுச்சேரி தீயணைப்பு துறை கடந்த ஆண்டில்... சாதனை ரூ.23.54 கோடி மதிப்புள்ள பொருட்கள் மீட்பு

தினமலர்  தினமலர்
புதுச்சேரி தீயணைப்பு துறை கடந்த ஆண்டில்... சாதனை ரூ.23.54 கோடி மதிப்புள்ள பொருட்கள் மீட்பு

புதுச்சேரி மாநில தீயணைப்பு துறைக்கு, கடந்த ஆண்டில் 1,384 அவசர கால அழைப்புகள் வந்துள்ளது. தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால், ரூ. 23.54 கோடி மதிப்பிலான பொருட்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.தீ விபத்துகள், மழை, புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படுபவர்களை மீட்பது மட்டுமின்றி, தண்ணீரில் விழுந்தவர்களை காப்பாற்றுவது, உயரமான இடங்களில் சிக்கிக்கொண்டவர்களை மீட்பது, கழிவு நீர் வாய்க்கால், தொட்டிகளில் விழுந்து விடும் ஆடு, மாடுகளை மீட்பது ஆகியவற்றில் தீயணைப்பு துறை முக்கிய பங்காற்றி வருகிறது.புதுச்சேரி மாநிலத்தில் அவசர காலங்களில் மக்களுக்கு விரைந்து உதவி செய்யும் வகையில், புதுச்சேரி நகர், டி.நகர், வில்லியனுார், பாகூர், மடுகரை, திருக்கனுார், திருபுவனை, காலாப்பட்டு, சேதராப்பட்டு, காரைக்கால், காரைக்கால் சுரகுடி, மாஹி, ஏனாம் உள்ளிட்ட ௧௪ இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் செயல்படுகின்றன. 201 தீயணைப்பு வீரர்கள் பணியாற்றி வருகின்றனர்.புதுச்சேரி தீயணைப்பு துறைக்கு நவீன தீயணைப்பு உபகரணங்கள் இல்லை என்ற குறையை போக்கும் வகையில், உலக வங்கி நிதியுதவிடன் ரூ. 18 கோடியில், ஒரு ஸ்கை லிப்ட் மற்றும் நான்கு அவசர கால மீட்பு வாகனங்கள், நவீன உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளது. அதை இயக்குவற்கு போதுமான ஆட்கள் இல்லை என்றாலும், தீயணைப்பு பணியில், தீயணைப்பு வீரர்களின் பணி தொய்வின்றி நடந்து வருகிறது.அந்த வகையில் கடந்த ஆண்டு (௨௦௧௬) புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தீயணப்பு நிலையங்களுக்கு, ௧,௩௮௪ அவசர கால அழப்புகள் வந்துள்ளது. அதன் மூலம் ரூ. ௨௩.௫௪ கோடி அளவிற்கு பொருட்கள் சேதமடையாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது.இதில் அதிகபட்சமாக புதுச்சேரி தீயணைப்பு நிலையத்திற்கு ௨௫௬ அவசர அழைப்புகள் வந்துள்ளது. அடுத்து, டி.நகருக்கு ௨௦௧, காரைக்கால் தீயணைப்பு நிலையத்திற்கு ௨௦௯ அழைப்புகளும், வில்லியனுார் ௧௫௩, பாகூர் ௧௪௨, மடுகரை ௬௩, திருக்கனுார் ௫௫, திருபுவனை ௭௭, காலாப்பட்டு ௩௪, சேதராப்பட்டு ௨௮, சுரக்குடி ௭௦, மாஹி ௬௨, ஏனாம் தீயணைப்பு நிலையத்திற்கு ௩௪ அழைப்புகள் கடந்த ஆண்டு வந்தன.கடந்த ஆண்டு அழைப்புகளின் எண்ணிக்கை (டிசம்பர் மாதம் நீங்கலாக), அதற்கு முந்தைய ஆண்டை (௨௦௧௫) ஒப்பிடுகையில் ௬௧ அழைப்புகள் கூடுதலாகும். அதே போன்று, சேதமடையாமல் பாதுகாக்கப்பட்ட பொருட்களின் மதிப்பும் ௨௦௧௫ ஆண்டை காட்டிலும், ரூ ௧௨.௭௬ கோடி அதிகமாகும்.
- நமது நிருபர்-

மூலக்கதை