ரிலீசுக்கு முன்பே வசூலில் பட்டைய கிளப்பும் ‘பைரவா’

FILMI STREET  FILMI STREET
ரிலீசுக்கு முன்பே வசூலில் பட்டைய கிளப்பும் ‘பைரவா’

விஜய் நடித்துள்ள பைரவா படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

தமிழகத்தின் பெரும்பாலான தியேட்டர்களை இப்படத்திற்கு ஒதுக்கியுள்ளனர் தியேட்டர் உரிமையாளர்கள்.

இதனால் மற்ற படங்கள் கூட இன்று வெளியாகவில்லை.

இந்நிலையில் இப்படத்தின் வியாபாராம் மட்டும் ரூ. 78 கோடியை நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது தமிழகத்தில் மட்டும் ரூ. 45 கோடியும் மற்றவைகளை சேர்த்து ரூ. 33 கோடியும் என சொல்லப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை