பெரியார் விருதுகள் அறிவிப்பு! 

விகடன்  விகடன்
பெரியார் விருதுகள் அறிவிப்பு! 

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் ஆண்டுதோறும் இயல், இசை, நாடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு, பொங்கல் திருநாளையொட்டி பெரியார் பெயரில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வகையில், இந்த ஆண்டு இயல், இசை, நாடகம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குகின்ற தமிழர்களுக்கு பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, ஆவணப்பட இயக்குநர் ஆர்.பி. அமுதன், எழுத்தாளர் அ.முத்து கிருஷ்ணன், திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன், பொருளாதார நிபுணர் ஜெ.ஜெயரஞ்சன், தன்னம்பிக்கைப் பேச்சாளர் ‘இன்ஸ்பைரிங் இளங்கோ’, எழுத்தாளர் ஜெயராணி, திரைப்பட இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார் ஆகியோர் இந்த ஆண்டு பெரியார் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இந்தமாதம் 15, 16 ஆகிய இரண்டு நாட்கள், சென்னை பெரியார் திடலில் நடைபெறும் திராவிடர் திருநாள் விழாவில் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

மூலக்கதை