தலைவர் பதவிக்குப் போட்டியிடும் அசார்!

விகடன்  விகடன்
தலைவர் பதவிக்குப் போட்டியிடும் அசார்!

ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட டீம் இந்தியா முன்னாள் கேப்டன்  மொஹம்மது அசாருதீன், கடந்த செவ்வாய் அன்று தேசிய கிரிக்கெட் சங்கத்தில் வேப்புமனுத் தாக்கல் செய்துள்ளார். இந்தத் தேர்தல் வரும் ஜனவரி 17-ம் தேதி நடைப்பெற உள்ளது. ஹைதராபத் கிரிக்கெட் சங்கம் தற்போது உற்சாகம் இழந்துகிடக்கிறது. அதன் தரத்தை உயர்த்த பாடுபடப்போவதாகத் தெரிவித்திருக்கிறார்.

தனது 15 ஆண்டுக்கால கிரிக்கெட் பயணத்தில் 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 6,215 ரன்களை எடுத்துள்ள அசாருதீன், 334 ஒருநாள் போட்டிகளில்  9,378 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மூலக்கதை