டொனால்ட் டிரம்பின் முதல் பேட்டி.!

விகடன்  விகடன்
டொனால்ட் டிரம்பின் முதல் பேட்டி.!

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் முதல் தடவையாக ஊடகங்கள் முன் தோன்றி இன்று பேட்டி அளித்தார். டிரம்ப் தன் மீது சுமத்தப்பட்டு இருந்த பல்வேறு விதமான குற்றச்சாட்டுகளுக்கு இந்தப் பேட்டியில் பதில் அளித்தார்.அதிலும் முக்கியமாக தனக்கும் ரஷ்யாவிற்கும் இடையில் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும், அவ்வாறு கூறப்படும் அனைத்து செய்திகளும் வெறும் வதந்தி என்றும் கூறினார்.

மேலும் ரஷ்ய அதிபர் புடின், என்னை பாராட்டினால், அதை நான் மிகப்பெரிய சொத்தாக கருதுவேன் என்றார். சில நாட்களுக்கு முன் டிரம்ப் வெற்றி பெற்றதில் ரஷ்யாவிற்கு தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

மூலக்கதை