திரும்ப வருகிறார் மரியா ஷரபோவா!

விகடன்  விகடன்
திரும்ப வருகிறார் மரியா ஷரபோவா!

முன்னணி டென்னிஸ் வீராங்கனையான மரியா ஷரபோவா, சென்ற ஆண்டு ஊக்கமருந்து தொடர்பான புகாரில் சிக்கி டென்னிஸ் விளையாட்டில் இருந்து இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்டார். தவறை ஒப்புக்கொண்டதால் தடைக்காலம் 15 மாதங்களாகக் குறைக்கப்பட்டது. வரும் ஏப்ரல் மாதம் அந்தத் தடை முடியப்போகிறது.  ஏப்ரல் 26-ம் தேதி ஜெர்மனியில் நடைப் பெற உள்ள  'Porsche Grand Prix' போட்டியில் கலந்துகொண்டு விளையாடப்போகிறார்.

ஐந்து முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற ரஷ்யா வீராங்கனை மரியா ஷரபோவா, மெல்டோனியம் என்ற மருந்தைப் பயன்படுத்தியதற்காக கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா ஓப்பன் டென்னிஸ் போட்டியில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை