எப்பாடு பட்டாவது ஜல்லிக்கட்டு நடத்தியே தீர வேண்டும்.. டி.ஆர். ஆவேசம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எப்பாடு பட்டாவது ஜல்லிக்கட்டு நடத்தியே தீர வேண்டும்.. டி.ஆர். ஆவேசம்!

சென்னை: எப்பாடு பட்ட்டாவது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தியே தீர வேண்டும் என லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் ஆவேசமாக கூறியுள்ளார்.

தமிழக மக்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு கடந்த 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறாமலே போனது.

இந்த நிலையில் இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடத்தியே தீர வேண்டும் என பலரும் ஆதரவு குரல் எழுப்பி வருகின்றனர். ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள், பொதுமக்கள், மாடுபிடி வீரர்கள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நாடாளுமன்றத்தில் உள்ள அதிமுக எம்.பி.க்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள் என கேள்வி எழுப்பினார். மேலும் எப்பாடு பட்டாவது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தியே தீர வேண்டும் எனவும் அவர் கூறினார்.

மூலக்கதை