திமுக ஆட்சிக்கு வந்தால் பொங்கல் திருநாள் மீண்டும் தமிழ் புத்தாண்டாக மாற்றப்படும்: ஸ்டாலின் பேச்சு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
திமுக ஆட்சிக்கு வந்தால் பொங்கல் திருநாள் மீண்டும் தமிழ் புத்தாண்டாக மாற்றப்படும்: ஸ்டாலின் பேச்சு

காஞ்சிபுரம்: தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பொங்கல் திருநாள் தமிழ் புத்தாண்டாக மாற்றப்படும் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் குன்றத்தூர் ஒன்றியம் கோவூரில் சமத்துவ பொங்கல் விழா இன்று மாலை நடைபெற்றது. விழாவில் திமுக செயல் தலைவரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு. க. ஸ்டாலின் குடும்பத்துடன் பங்கேற்று கோவூர் கிராம மக்களுடன் இணைந்து சமத்துவ பொங்கலிட்டு கொண்டாடினார்.

விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பொங்கல் திருநாள் தமிழ் புத்தாண்டாக மாற்றப்படும் என கூறினார். மேலும், தமிழ் பண்பாட்டிற்கு ஆபத்து என்றால் தமிழினம் அதனை பார்த்து கொண்டிருக்காது. தமிழகத்தில் விவசாயிகளின் நிலை வருத்தம் அளிக்கும் வகையில் உள்ளது. இதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

மூலக்கதை