எங்கே போனார்கள் தமிழக எம்.பிக்கள்.? கட்ஜு சாட்டையடி கேள்வி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எங்கே போனார்கள் தமிழக எம்.பிக்கள்.? கட்ஜு சாட்டையடி கேள்வி

டெல்லி: ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக தமிழக எம்.பி.க்கள் நடவடிக்கை எடுத்திருந்தால் ஜல்லிக்கட்டு திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கும் என முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு நடத்த வசதியாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டுமென குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு நேற்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் தமிழக எம்.பிக்கள் முயற்சி செய்திருந்தால் ஜல்லிக்கட்டு திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கும் எனக் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றைப் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் மட்டுமே தனியாக ஜல்லிக்கட்டுக்காக குரல் கொடுக்க முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் எங்கே போனார்கள் தமிழக எம்.பிக்கள்.? எனவும் கேட்டுள்ளார். தமிழக எம்.பிக்கள் முயற்சி செய்திருந்தால் மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருக்க முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Am I alone expected to plead for permitting jallikattu ? Where r Tamilnadu MPs? If they had been active, by now law would have been amended

மூலக்கதை