சோதனைக்குச் செல்லும் காஸ்மெடிக் பொருட்கள்

விகடன்  விகடன்
சோதனைக்குச் செல்லும் காஸ்மெடிக் பொருட்கள்

நுண் மணிகளில் (Microbeads) தயாரிக்கப்படும், காஸ்மெடிக் பொருட்களால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால் அவற்றை தடை செய்யவேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நுண்மணிகளால் தயாரிக்கப்படும், காஸ்மெடிக் பொருட்களை சோதனை செய்து, நான்கு வாரங்களில் அறிக்கைத் தாக்கல் செய்ய, பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணை பிப்ரவரி 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நுண்மணிகளால் தயாரிக்கப்படும் காஸ்மெடிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன் கடல்வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

மூலக்கதை