பஞ்சாப் முதல்வர் மீது செருப்பு வீச்சு !

விகடன்  விகடன்
பஞ்சாப் முதல்வர் மீது செருப்பு வீச்சு !

பஞ்சாப் மாநிலம் முக்த்சர் மாவட்டம், லாம்பியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அம்மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மீது, இளைஞர் ஒருவர் திடீரென தனது காலணியை எடுத்து வீசி உள்ளார். இதில் அவரது மூக்குக் கண்ணாடி உடைந்தது. இதனால் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த முதல்வர் பாதல், அங்கிருந்து வெளியேறினார். இதனையடுத்து அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மீது, ஏற்கனவே கடந்த 2014-ம் ஆண்டு, இளைஞர் ஒருவர், தனது ஷூவைக் கழற்றி பாதலை நோக்கி வீசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை