அவதானம் -கொடிய வைரஸ் தொற்று!! 52 பேர் பலி!!

PARIS TAMIL  PARIS TAMIL
அவதானம் கொடிய வைரஸ் தொற்று!! 52 பேர் பலி!!

 

தடிமனுடன் கூடிய காயச்சல் நோயான Grippe மிகவும மோசமாகப் பிரான்ஸ் எங்கும் பரவி வருவதை ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.
 
«வைத்தியசாலைகளின் அனைத்து விதமான சேவைகளும் இதற்காக் திசை திருப்பி விடப்பட்டுள்ளன. நாட்டின் 142 அரச வைத்தியசாலைகள் தொற்று நோய்க்கான அவசரகால நிலைமைப் பிரகடணத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவசரமில்லலாத, ஏற்கனவே திட்டமிடப்பட்ட சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டு, வைத்தியசாலைக் கட்டடில்கள் ஒதுக்கப்படுகின்றன. அரசாங்கம் முழுமையான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது» என இன்று பாராளுமன்றத்தில், இந்தத் தொற்று நோய்க்கான முனக்னேற்பாடுகளில் சந்தேகம் உள்ளது என,எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளிற்குப் பதிலளிளத்த, சுகாதார அமைச்சர் மரிசோல் தூரென் தெரிவித்தள்ளார்.
 
 
இப்பொழுது பிரான்சில் ஏற்பட்டுள்ள காய்ச்சல் தொற்றின் வைரசானது A(H3N2) வகையினைச் சேர்ந்தது. இரண்டு வருடங்களிற்கு முன்னர் பிரான்சில் பரவிய இதே வைரஸ் தொற்றானது, அந்த வருடத்தின் குளிர்கால இறப்புத் தொகையை என்றுமில்லாதவாறு 18,300 பேராக உயர்த்தியிருந்தமை குறிப்படத்தக்கது.
 
டிசம்பர் முடிவிலிருந்து ஆரம்பித்துள்ள இந்தக் காய்ச்சல் வயதானவர்களை அதிகமாகத் தாக்கி உள்ளது. 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்தக் காய்ச்சலிற்குள் சிக்கினால், உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கும்படி எச்சரிக்க்பபட்டுள்ளது. இந்தக் காய்ச்சலினால், கடந்த பத்து நாளைக்குள், 52 பேர் சாவடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

மூலக்கதை