பெரும் வரவேற்பு பெற்ற 'பாட்ஷா' மெருக்கூட்டப்பட்ட வடிவத் திரையிடல்

தி இந்து  தி இந்து
பெரும் வரவேற்பு பெற்ற பாட்ஷா மெருக்கூட்டப்பட்ட வடிவத் திரையிடல்

ரஜினியின் 'பாட்ஷா' மெருக்கூட்டப்பட்ட திரையிடலுக்கு, திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

ரஜினி படங்களின் வரிசையில், அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து மாபெரும் வரவேற்பு பெற்ற படம் 'பாட்ஷா'. சுரேஷ்கிருஷ்ணா இயக்கியிருந்த படத்தில் ரஜினி, நக்மா, ரகுவரன், விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தேவா இசையமைத்து இருந்தார். 1995ம் ஆண்டு இப்படம் வெளியானது.

தற்போது 'பாட்ஷா' படத்தை மெருக்கூட்டி 5.1 ஒலி வடிவத்தில் மீண்டும் வெளியிட இருக்கிறார்கள். 'பாட்ஷா' படத்தைத் தயாரித்த சத்யா மூவிஸ் நிறுவனம், தங்களுடைய நிறுவனம் தொடங்கி 50 ஆண்டுகள் ஆவதால் மீண்டும் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது.

'பாட்ஷா' மெருகூட்டப்பட்ட வடிவத்தில் பிரத்யேகக் காட்சி, சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, சரண்ராஜ், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட 'பாட்ஷா' படக்குழுவினரோடு ரசிகர்களும் கலந்து கொண்டார்கள்.

இக்காட்சிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பலரும் இக்காட்சி திரையிடலில் புகைப்படங்கள் எடுத்து இணையத்தில் தங்களுடைய பகிர்ந்தார்கள். மேலும், அப்பாடல்களுக்கு நடனமாட ரசிகர்களின் வீடியோ பதிவுகள் இணையத்தில் வெளியிட்டார்கள்.

இந்த மெருக்கூட்டப்பட்ட 'பாட்ஷா' படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் முடிவாகவில்லை. இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாதத்தில் இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

சத்யம் திரையரங்கில் எடுக்கப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்ட வீடியோ பதிவுகள்:

Only @superstarrajini's film can bring such a celebration at Sathyam cinemas, re-released after 21 years!! #Baashha pic.twitter.com/0QKJxohS4O

— Kolly Buzz (@KollyBuzz) January 10, 2017

#Baashha Ra Ra Raamaiya Song Massive Response @ Sathyam Thearte #BossOfMass #Baasha @RIAZtheboss @vbzu pic.twitter.com/11YJ1q5KiJ

— Rohith Sharma (@Rajini_RFC) January 10, 2017

மூலக்கதை