கல் வீசிய நாமல்! ராஜபக்ஷர்களை கைவிட்டது சீனா!

PARIS TAMIL  PARIS TAMIL
கல் வீசிய நாமல்! ராஜபக்ஷர்களை கைவிட்டது சீனா!

 ராஜபக்சவினரின் இறுதியான ஒரே சர்வதேச நண்பனான சீனாவையும் பகைத்து கொண்டு விட்டதாக ராஜதந்திர தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
ராஜபக்சவினர் பொய்களை கூறி சீனாவை தவறாக வழிநடத்தியதால், ராஜபக்சவினர் மீது சீனா கடும் கோபத்தில் இருப்பதாக தெரிய வருகிறது.
 
ஹம்பாந்தோட்டையில், சீனா - சிறிலங்கா கைத்தொழில் பேட்டையை ஆரம்பிக்கும் நிகழ்வை சீர்குலைக்க ராஜபக்சவினர் ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு நடவடிக்கைகளே சீனாவின் இந்த கோபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.
 
இந்த வைபவம் நடைபெறுவதற்கு முன்னர், கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் ராஜபக்சவினரை அழைத்து உத்தேச அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக தெளிவுப்படுத்தியுள்ளதுடன் இது ராஜபக்சவினர் ஆட்சியில் இருக்கும் போது சீனா முன்வைத்த திட்டம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 
எதிர்ப்புக்கு மக்களை ஒருங்கிணைக்க எதிர்பார்த்துள்ளீர்களா? என சீன தரப்பில் இதன் போது வினவப்பட்டுள்ளது.
 
இந்த சந்திப்பில் கலந்து கொண்ட நாமல் ராஜபக்ச இந்த அபிவிருத்திப் பணியை தமது குடும்பத்தினர் எதிர்க்கவில்லை எனக் கூறியுள்ளார்.
 
இது சம்பந்தமாக சீன தூதரகம் நாமல் ராஜபக்சவிடம் உறுதிமொழியை ஒன்றையும் பெற்றுக்கொண்டுள்ளது.
 
ராஜபக்சவினர் வழங்கிய இந்த உறுதிமொழிக்கு அமையவே சீனா அன்றைய தினம் சீனாவின் முதலீட்டாளர்களை ஹம்பாந்தோட்டைக்கு அழைத்திருந்தது.
 
எவ்வாறாயினும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் பழக்கத்தை கொண்டிராத ராஜபக்சவினர், அன்றைய தினம் மக்களை தூண்டி பிரதேசத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
 
எது எப்படி இருந்த போதிலும் தமது தூதரகத்தில் வாக்குறுதியை வழங்கிய நாமல் ராஜபக்சவே முன்னணியில் வந்து கற்களை வீசி மக்களை தூண்ட காரணமாக இருந்தமை குறித்து சீனா கடும் கோபத்தில் இருப்பதாக தெரியவருகிறது.
 
யுத்தத்தின் ஆரம்பத்தில் ராஜபக்சவினருக்கு உதவிகளை வழங்கிய அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா, ஜப்பான் ஆகிய சகல நாடுகளை ராஜபக்சவினர் தமது ஆட்சிக்காலத்தில் பகைத்து கொண்டனர்.
 
இந்த நாடுகளுக்கு வாக்குறுதிகளை வழங்கிவிட்டு அவற்றை மீறினர். தற்போது தமது இறுதியான சர்வதேச நண்பனான சீனாவிடமும் பொய்யான வாக்குறுதியை வழங்கி அந்த நாட்டையும் பகைத்து கொண்டுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

மூலக்கதை