மல்லையா பதிலளிக்க 3 வாரம் கெடு - உச்சநீதிமன்றம்

விகடன்  விகடன்
மல்லையா பதிலளிக்க 3 வாரம் கெடு  உச்சநீதிமன்றம்

வங்கிகளிடம் பெற்ற ரூ.9,000 கோடி கடனை திருப்பி செலுத்தாமல், தொழிலதிபர் விஜய்மல்லையா வெளிநாடு சென்றது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மல்லையா, அவரது வாரிசுகளுக்கு 40 மில்லியன் டாலர் பரிமாற்றம் செய்ததாக வங்கிகள் குற்றம்சாட்டின. இதையடுத்து மூன்று வாரத்தில் பதிலளிக்க, மல்லையாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணை பிப்ரவரி 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கை எஸ்.பி.ஐ தலைமையில் 17 வங்கிகள் தொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மூலக்கதை