'தங்கல்' படத்துக்குக் கிடைத்த வரவேற்பு: ஆமிர்கான் நெகிழ்ச்சி

தி இந்து  தி இந்து
தங்கல் படத்துக்குக் கிடைத்த வரவேற்பு: ஆமிர்கான் நெகிழ்ச்சி

'தங்கல்' படத்துக்குக் கிடைத்த பெரும் வரவேற்புக் குறித்து ஆமிர்கான் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

நித்தேஷ் திவாரி இயக்கத்தில் ஆமிர்கான் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'தங்கல்'. கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கணக்கில் கொண்டு வெளியான இப்படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் வெளியான 3 நாட்களில் சுமார் ரூ.100 கோடியைத் தாண்டி படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

அமெரிக்கா, கனடா உள்ளிட்ட உலக நாடுகளிலும் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. வசூலில் பல்வேறு சாதனைகளை படைத்து வந்தது 'தங்கல்'. தற்போது அதிக வசூல் செய்த இந்தி படங்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது 'தங்கல்'. சுமார் 350 கோடி வசூலை கடந்துள்ளது.

பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது குறித்து ஆமிர்கான், "'தங்கல்'க்குக் கிடைத்த அன்பைப் பார்த்து அளவுகடந்த மகிழ்ச்சியுற்றேன். எனக்குக் கிடைத்த மிக ஆத்மார்த்தமான பாராட்டுகளில் இதுவும் ஒன்று. இந்தப் படத்தை தங்கள் படமாக உணர்ந்து அரவணைத்த அனைவருக்கும் நன்றி கூற விரும்புகிறேன்.

ஒரு கலைஞனுக்கு கிடைக்கும் மிகப்பெரிய பாராட்டு அதுதான். எனது மனதின் ஆழத்திலிருந்து நன்றி சொல்கிறேன். நிதேஷ் சார் உங்களுக்கு நன்றி" என்று தனது ட்விட்டர் பகக்த்தில் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை