குடியரசு தின விழாவை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி: உளவுத்துறை எச்சரிக்கை

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
குடியரசு தின விழாவை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி: உளவுத்துறை எச்சரிக்கை

டெல்லி: குடியரசு தின விழாக் கொண்டாட்டத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தலைநகர் டெல்லி உட்பட நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

குடியரசு தின விழா நாடுமுழுவதும் வரும் 26ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று டெல்லி உட்பட அனைத்து மாநிலங்களிலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் குடியரசு தின விழாவை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

உளவுத்துறையின் எச்சரிக்கை மற்றும் அறிவுறுத்தலையடுத்து தலைநகர் டெல்லி மற்றும் மாநில தலைநகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக விமான நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

விமான நிலையங்களில் பயணிகள் பலத்த சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.அவர்களின் உடைமைகளும் தீவிரமாக சோதனை செய்யப்படுகிறது.

மூலக்கதை