வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய இயக்குனராக ஆடம்ஸ் நியமனம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய இயக்குனராக ஆடம்ஸ் நியமனம்

 ஜமைக்கா: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய இயக்குனராக முன்னாள் வீரர் ஜிம்மி ஆடம்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 3 வருடம் இந்த பணியில் நீடிப்பார்.

49 வயதான ஜிம்மி ஆடம்ஸ், 1992ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். 45 டெஸ்ட் மற்றும் 127 ஒருநாள் போட்டிகளில் ஆடி உள்ள அவர், கேப்டனாகவும் பணியாற்றி இருக்கிறார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ஆடம்ஸ் விண்ணப்பித்த நிலையில், அதற்கு பதில் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுபற்றி ஆடம்ஸ் கூறுகையில், கரீபியன் கிரிக்கெட்டுடன் மீண்டும் நேரடி தொடர்பில்  ஈடுபடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. வெஸ்ட் இண்டீஸ்அணியை முன்னோக்கி கொண்டு செல்ல அனைவரும் ஒத்துழைக்க வேண்டும், என்றார்.


.

மூலக்கதை