தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடந்தே தீரும் : முதல்வர்

TAMIL 24 NEWS  TAMIL 24 NEWS
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடந்தே தீரும் : முதல்வர்

தமிழகத்தில் இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடைபெறுவதை அரசு உறுதி செய்யும் என்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்று தமிழகமெங்கும் போராட்டங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்தநிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டு என்று அதிமுக எம்.பிக்கள் டெல்லியில் மத்திய அமைச்சர் , பிரதமர் அலுவலகம் ஆகியவற்றில் கோரிக்கை மனு அளித்தனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு முயற்சிக்கும் என்று தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ,” தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்யும். தமிழர்களின் பண்பாடு கலாச்சாரம் கட்டிக்காக்கப்படும். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் எள்ளவும் பின்வாங்க மாட்டோம்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 2009-ல் திமுக கொண்டு வந்த சட்டத்தை பிராணி வதை தடுப்பு சட்டத்திற்கு முரணானது என்று கூறி உயர்நீதிமன்றம் அந்த சட்டத்தை ரத்து செய்தது. எனவே தமிழக அரசால் எந்த சட்டத்தையும் இயற்ற முடியாது.” என்று கூறியுள்ளார்.

மூலக்கதை