நடுவழியில் தடைப்பட்ட RER A - பயணிகள் அவதி!

PARIS TAMIL  PARIS TAMIL
நடுவழியில் தடைப்பட்ட RER A  பயணிகள் அவதி!

RER A தொடருந்து ஒன்று போக்குவரத்து தடைப்பட்டு  நடுவழியில் நின்றதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். பின்னர் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது.
 
Yvelines இன் Maisons-Laffitte பகுதிக்கும் Val-d'Oise இன் Cergy-le-Haut பகுதிக்கும் இடையே இத்தொடருந்து தடைப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடருந்தை தொடர்ந்து இயக்கமுடியாமல் போக, நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 07.50  மணியில் இருந்து தடைப்பட்டது.  தடைப்பட்டதற்குரிய காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பின்னர் அந்த வழி தொடருந்துகள் அனைத்தும் இரவு 09.31 வரை பாதிக்கப்பட்டதாக RATP, சமூகவலைத்தளமான டுவிட்டரில் தெரிவித்துள்ளது. 
 
பின்னர் பயணிகள் தொடருந்தில் இருந்து இறக்கப்பட்டு Cergy தொடருந்து நிலையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டதாகவும், சில பயணிகளுக்கு மகிழுந்து ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடருந்து தடைப்பட்டு நின்றதற்குரிய காரணங்கள் குறித்து முழுமையான தகவல் தெரிவிக்கப்படவில்லை!!

மூலக்கதை