எசொன் - கடுமையான காய்ச்சல் தொற்று - பதற்றத்தில் அவசரசிகிச்சைப் பிரிவுகள்!!

PARIS TAMIL  PARIS TAMIL
எசொன்  கடுமையான காய்ச்சல் தொற்று  பதற்றத்தில் அவசரசிகிச்சைப் பிரிவுகள்!!

 தடிமனுடன் கூடிய காயச்சல் நோயான Grippe மிகவும மோசமாகப் பிரான்ஸ் எங்கும் பரவி வருகின்றது. முக்கியமாக முதியவர்களை இது தாக்கி வருகின்றது. இவர்களிற்கான தடுப்பு ஊசிகள் மருத்துவக் காப்புறுதியினால் வழங்கப்பட்டு, அவை போடப்பட்ட பின்னும் கூட இந்தத் தொற்று அதிகரித்தே செல்கின்றது.

எசொன் (Essonne) மாவட்டத்தில் இந்தத் தொற்றானது மிகவும் அதிகரித்துச் செல்வதால், இந்த மாவட்த்தின் அரசினர் வைத்தியசாiகைளின், அவசர சிகிச்சைப்பிரிவுகள் மிகவும் நெருக்கடிக்குள்ளும் பதற்றத்திற்குள்ளும் தள்ளப்பட்டுள்ளது.
 
 
 
வழமையாக அதியுச்சமாக 150 பேரிற்கு சிகிச்சை வழங்கும் அவசரசகிச்சைப் பிரிவு (Urgences) தற்பொழுது 240 பேரிற்குச் சிகிச்சை வழங்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. கடந்த வார இறுதியில் இந்தத் தொகையானது 280 ஆகவிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
 
வைத்தியசாலைகளில் வைத்தியர்களின் தொகை தட்டுப்பாட்டாக இருக்கும் நிலையில், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தே செல்வதானது, சுகாதார அமைச்சிற்கு அபாயமணியை அடித்துள்ளது.
 

மூலக்கதை